குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) தினம் – ஜூன் 27
June 28 , 2022 1148 days 440 0
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் என்பது பொதுவாக 250 பணியாளர்களுக்கு மேல் பணியமர்த்தாத, ஆனால் உலகளவில் மூன்றில் இரண்டு பங்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு வல்ல நிறுவனங்களாகும்.
இத்தினமானது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் 2017 ஆம் ஆண்டில் அதன் 74வது முழு அளவிலானக் கூட்டத்தில் அனுசரிக்கப்பட்டது.
சர்வதேச சிறு வணிகத்திற்கானச் சபையின் (ICSB) 2016 ஆம் ஆண்டு உலக மாநாட்டில், உலக மேம்பாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்கை அங்கீகரிக்க வேண்டிய அவசரத் தேவை குறித்தப் பிரகடனம் நிறைவேற்றப் பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, முறையான மற்றும் முறைசாரா குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மொத்த வேலைவாய்ப்பில் 70 சதவிகிதமும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவிகிதமும் பங்காற்றுகின்றன.
2022 ஆம் ஆண்டின் இந்தத் தினத்திற்கான கருத்துரு, ‘குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் - மீள்நிலைக் கூடிய மீட்சி’ என்பதாகும்.