TNPSC Thervupettagam

"குறைந்தபட்ச ஊதியம்" என்பதிலிருந்து "வாழ்விற்கான அடிப்படை ஊதியம்" என்ற நிலைக்கு மாறுவதற்கான ஒரு முன்மொழிதல்

January 3 , 2023 945 days 352 0
  • இந்தியாவில் வறுமையில் வாழும் அதிகப்படியான மக்களை அந்த நிலையிலிருந்து மீட்டு கொண்டு வரும் ஒரு முயற்சியாக மத்தியத் தொழிலாளர் அமைச்சகம் ஆனது தற்போது "குறைந்தபட்ச ஊதியம்" என்பதிலிருந்து "வாழ்விற்கான ஒரு அடிப்படை ஊதியம்" என்ற நிலைக்கு மாற்றுவது குறித்து ஆலோசித்து வருகிறது.
  • "வாழ்விற்கான அடிப்படை ஊதியம்" என்பது ஒரு தனிநபர் அல்லது குடும்பம் தனக்கென போதுமான தங்குமிடம், உணவு, சுகாதாரம் மற்றும் பிற அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்கு உதவும் வருமான நிலை ஆகும்.
  • குறைந்தபட்ச வருமானம் என்பது மன நிறைவான வாழ்க்கைத் தரத்தை பெற உதவச் செய்வதோடு, அது தனிநபர்களை வறுமையில் விழாமலும் தடுக்கிறது.
  • தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான குறைந்தபட்ச வருமானம் ஆனது வாழ்விற்கான ஒரு அடிப்படை ஊதியம் என வரையறுக்கப் படுகிறது.
  • இது தொழிலாளர் உற்பத்தித் திறன் மற்றும் செயல்திறன்களை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்திலிருந்து வேறுபட்டதாகும்.
  • குறைந்தபட்ச ஊதியம் என்பது சட்டத்தின் படி ஒரு தொழிலாளி ஈட்டக்கூடிய மிகக் குறைந்தபட்சத் தொகையாகும்.
  • பணவீக்கத்தினைப் பொறுத்து இது மாறுபடாது என்பதால் அரசின் திட்டத்தின் மூலமாக மட்டுமே இந்த அளவினை அதிகரிக்க முடியும்.
  • வாழ்விற்கான அடிப்படை ஊதியத்தில் இந்தச் செயல்முறை இல்லை.
  • வாழ்விற்கான அடிப்படை ஊதியம் என்பது வசதியாக வாழ்வதற்கான சராசரிச் செலவினங்கள் மூலம் நிர்ணயிக்கப் படுகிற நிலையில், குறைந்தபட்ச ஊதியம் என்பது அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு நிலையான தொகையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்