குறைந்தபட்ச பொதுப் பங்குதாரர் விதிமுறைகள் திருத்தம்
March 19 , 2026 15 hrs 0 min 52 0
IPO சந்தையை மேம்படுத்தவும், பட்டியலிடல் விதிமுறைகளை எளிதாக்கவும் மத்திய நிதி அமைச்சகம் குறைந்தபட்ச பொதுப் பங்குதாரர் (MPS) விதிகளில் திருத்தம் செய்து உள்ளது.
நிறுவனங்கள் பட்டியலிடப்பட்ட பிறகு அவற்றின் சந்தை மதிப்பின் அடிப்படையில் ஒரு அடுக்கு முறையை இந்தப் புதிய விதிகள் அறிமுகப்படுத்துகின்றன.
பெரிய நிறுவனங்களின் பட்டியலிடலை ஊக்குவிப்பதற்காக, சில சந்தர்ப்பங்களில் ஆரம்ப நிலை குறைந்தபட்ச பொதுப் பங்கு ஒதுக்கீடு 2.5% வரை குறைக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்கள் பட்டியலிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் பொதுப் பங்குகளை படிப்படியாக 25% ஆக உயர்த்த வேண்டும்.
இந்த மாற்றங்கள் பங்குச்சந்தை பட்டியலிடலை நிர்வகிக்கும் 'பத்திர ஒப்பந்தங்கள் (ஒழுங்குமுறை) விதிகள், 1957'-இல் திருத்தங்களை மேற்கொள்கின்றன.
சந்தை பங்கேற்பை மேம்படுத்துதல், IPO நடவடிக்கைகளை மீட்டெடுத்தல் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் தேசிய பங்குச் சந்தை (NSE) போன்ற பெரிய நிறுவனங்களை பட்டியலிட அனுமதிப்பது இச்சீர்திருத்தத்தின் நோக்கமாகும்.