குறைந்த அளவு மீத்தேன் வாயுவை உமிழும் ஆடுகளை இனப்பெருக்கம் செய்தல் - நியூசிலாந்து
December 10 , 2019 2212 days 761 0
நியூசிலாந்து கால்நடைத் தொழில் துறையானது “உலகளாவிய முதலாவது” மரபணுத் திட்டமான “மாட்டிறைச்சி + ஆட்டுக்குட்டி நியூசிலாந்து (Beef + Lamb New Zealand - B+LNZ) மரபியல்” என்ற ஒன்றைத் தொடங்கியுள்ளது. இது ஒரு புதிய “மீத்தேன் ஆராய்ச்சி இனப் பெருக்க முறையை” அறிமுகப்படுத்தியுள்ளது.
குறைந்த அளவு மீத்தேன் வாயுவை உமிழும் ஆடுகளை இனப்பெருக்கம் செய்வதன் மூலம் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு இது உதவ இருக்கின்றது.
ஓசோன் அடுக்கில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்காக மரபணு மாற்றம் செய்யப் பட்ட இந்த மேய்ச்சல் விலங்குகளைப் பயன்படுத்த முடியும்.
நியூசிலாந்தில் ஒவ்வொரு நபருக்கும் சுமார் ஆறு ஆடுகள் உள்ளன. மேலும் அந்நாட்டின் மொத்தப் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் கால்நடைத் தொழிலானது மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது.