TNPSC Thervupettagam

குறைந்த செலவிலான துத்தநாக-காற்று மின்கலத் தொழில்நுட்பம்

July 27 , 2026 15 hrs 0 min 38 0
  • ஆற்றல் சேமிப்பு மற்றும் மின்சார வாகனங்களுக்காக குறைந்த செலவிலான துத்தநாக-காற்று மின்கலத் தொழில்நுட்பங்களை (zinc-air battery) இந்திய அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
  • துத்தநாக-காற்று மின்கலங்கள் துத்தநாகத்தை நேர்மின்வாயாகவும், காற்றில் உள்ள ஆக்ஸிஜனை எதிர்மின்வாய் வினைபொருளாகவும் பயன்படுத்துகின்றன, இது அதிக ஆற்றல் அடர்த்தியை வழங்குகிறது.
  • சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு நிலையான நானோ திரவ மின்பகுளி மற்றும் குறைந்த செலவிலான தாமிரம் கலந்த மாங்கனீசு டை ஆக்சைடு வினையூக்கியை உருவாக்கியுள்ளனர்.
  • சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (IIT) இயந்திரத்தனமாக மின்னேற்றம் செய்யக்கூடிய துத்தநாக-காற்று மின்கலங்களை உருவாக்கி வருகிறது, மேலும் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துடன் இணைந்து 1 கிலோவாட்-மணிநேரம் (kWh) மின்னேற்றம் செய்யக்கூடிய ஒரு முன்மாதிரியை உருவாக்கி வருகிறது.
  • துத்தநாக-காற்று மின்கலங்கள் நீர் சார்ந்த மின்பகுளிகளைப் பயன்படுத்துகின்றன, இதனால் அவை பல லித்தியம்-அயனி மின்கலங்களை விட குறைவான எரியும் தன்மையைக் கொண்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்