குறையும் ஆப்பிரிக்க ஊண் உண்ணும் பறவைகளின் எண்ணிக்கை
April 11 , 2024 500 days 403 0
கடந்த 40 ஆண்டுகளில் ஆப்பிரிக்க ஊண் உண்ணும் பறவைகளின் எண்ணிக்கை சுமார் 88 சதவிகிதம் என்ற அளவில் பரவலாக குறைந்து வருகின்றன.
ஆய்வு செய்யப்பட்ட 42 இனங்களில் 37 இனங்கள் அவற்றின் எண்ணிக்கையில் ஒரு சரிவைக் கண்டுள்ளன.
மொத்த இனங்களில், 29 இனங்கள் (69 சதவீதம்) கடந்த மூன்று தலைமுறையாக அதன் எண்ணிக்கையில் சரிவைக் கண்டுள்ளன.
ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் உள்ள 27 இனங்களில் 24 இனங்கள் (89 சதவீதம்) சரிவு வரம்பை மீறியுள்ளன.
இவற்றில் குறைந்த கவனம் செலுத்தப்பட வேண்டியவை என்ற பிரிவில் பட்டியலிடப் பட்டுள்ள 13 இனங்கள், அவற்றின் நிலையை மீண்டும் மறுமதிப்பீடு செய்ய வேண்டிய சிக்கலையும் எழுப்புகிறது.