TNPSC Thervupettagam

குற்றப்பிரிவு பல்பயன்பாட்டு முகமையகம் (Crime Multi Agency Centre)

March 16 , 2020 1873 days 622 0
  • மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் குற்றப்பிரிவு பல்பயன்பாட்டு முகமையகத்தைத் துவங்கி வைத்தார்.
  • இது  கடுமையான குற்றங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு தொடர்பான பிற பிரச்சினைகள் குறித்த தகவல்களைப் பகிர்வதற்காக நிறுவப் பட்டுள்ளது.
  • தேசியக்  குற்ற ஆவணக் காப்பகத்தின் 35ஆவது தொடக்கத் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் அவர் இந்த மையத்தைத் தொடங்கினார்.
  • காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள், வழக்குரைஞர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு இணைய வழிக் குற்ற விசாரணை தொடர்பான தொழில் சார்ந்த தரமான மின்-கற்றல் சேவைகளுக்காகத் தேசிய இணைய வழிக் குற்றப் பயிற்சி மையத்தையும்  அவர் தொடங்கி வைத்தார்.
  • தேசியக் குற்ற ஆவணக் காப்பகம்   தனது 35ஆவது தொடக்கத் தினத்தை 2020 மார்ச் 12 அன்று கொண்டாடியது.
  • இது புது தில்லியை தலைமையகமாகக் கொண்டுள்ளது. இது இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் ஒரு பகுதியாகும்.
  • இது இந்திய தண்டனைச் சட்டம், சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்கள் ஆகியவற்றால் வரையறுக்கப்பட்ட குற்றத் தரவுகளைச் சேகரித்துப் பகுப்பாய்வு செய்யும் ஒரு இந்திய அரசின் முகமை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்