குற்ற விசாரணை அமைப்பின் முதலாவது பெண் தலைவர் - தென் ஆப்பிரிக்கா
December 6 , 2018 2451 days 789 0
தென் ஆப்பிரிக்க அதிபர் சைரில் ரமபோசா தென் ஆப்பிரிக்க குற்ற விசாரணை அமைப்பின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வழக்குரைஞரான ஷமிளா படோஹியை நியமித்துள்ளார்.
இப்பதவியை ஏற்கவிருக்கும் முதல் பெண் படோஹி ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தேசிய குற்ற விசாரணை அமைப்பின் இயக்குநராக தனது புதிய பொறுப்பை ஏற்கவிருக்கிறார் (NDPP - National Director of Public Prosecutions).
இவர் குவா சூலு நட்டல் மாகாணத்தில் முன்னாள் விசாரணைத் தலைவராக பணியாற்றினார். மேலும் இவர் 2009 ஆம் ஆண்டு முதல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC - International Criminal Court) விசாரணை அதிகாரிக்கு மூத்த ஆலோசகராகப் பணியாற்றினார்.
1995 ஆம் ஆண்டில் நிறவெறித் தாக்குதல் குறித்து விசாரிப்பதற்காக நெல்சன் மண்டேலாவால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழுவில் இவரும் இடம் பெற்றிருந்தார்.