TNPSC Thervupettagam

குல்பூஷன் ஜாதவ் – பன்னாட்டு நீதிமன்றம்

July 18 , 2019 2127 days 703 0
  • இந்திய உளவாளி என்று குற்றம் சாட்டப்பட்ட குல்பூஷன் ஜாதவ் என்பவரின் தண்டனைக்கான உத்தரவை மறு ஆய்வு செய்யுமாறு பன்னாட்டு நீதிமன்றம் (International Court of Justice - ICJ) பாகிஸ்தானை அறிவுறுத்தியுள்ளது. இந்நீதி மன்றம் இவரின் தூக்கு தண்டனையையும் நிறுத்தி வைத்துள்ளது.
  • ICJ ஆனது எவ்வளவு விரைவில் இந்தியாவானது தூதரக ரீதியில் இவரைச் சந்திப்பதை அனுமதிக்க வேண்டும் என்று இஸ்லாமாபாத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.
  • 1963 ஆம் ஆண்டின் தூதரக உறவுகள் மீதான வியன்னா ஒப்பந்தத்தின் விதி 36-ஐ மீறியுள்ளதாக பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
  • 2016 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் இராணுவம் இவரை விசாரணைக்கு எடுத்துக் கொண்டவுடன், அது குறித்த தகவலை உடனடியாக இந்தியாவிடம் தெரிவிக்க பாகிஸ்தான் தவறியது.

ICJ பற்றி
  • ICJ ஆனது நெதர்லாந்தின் தி ஹேக்கில் அமைந்துள்ளது.
  • இது 1945 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
  • இது ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மற்றும் பாதுகாப்பு அவையினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 நீதிபதிகளைக் கொண்டுள்ளது. இவர்களின் பதவிக் காலம் 9 ஆண்டுகளாகும்.
  • இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான தல்வீர் பண்டாரி 2012 ஆம் ஆண்டு முதல் ICJல் நீதிபதியாக உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்