சமீபத்தில் இந்திய மலையேற்றக் கூட்டமைப்பானது திரிசூல் சிகரத்திற்கு குளிர்கால மலையேற்றப் பயணத்தை மேற்கொள்வதற்காக அர்ஜுன் வாஜ்பாய் என்பவரின் தலைமையிலான 3 நபர்களைக் கொண்ட ஒரு குழுவிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தியாவில் மலையேற்றப் பயணங்கள் என்பது பொதுவாக பருவ காலத்திற்கு முன்பு மற்றும் பருவ காலத்திற்குப் பின்பு என்ற இரு காலங்களில் மட்டுமே மேற்கொள்ளப் படும்.
2010 ஆம் ஆண்டில் தனது 16வது வயதில் எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறிய இளம் வயது இந்தியர் அர்ஜுன் வாஜ்பாய் என்பவர் ஆவார்.
திரிசூல் சிகரமானது உத்தரகாண்ட்டின் மேற்கு குமாவூன் என்ற மலைத் தொடரில் அமைந்துள்ளது.