TNPSC Thervupettagam

குள்ளப் பன்றி பாதுகாப்புத் திட்டம் – அஸ்ஸாம்

September 15 , 2026 13 hrs 0 min 15 0
  • அஸ்ஸாமில் அழியும் தருவாயில் உள்ள குள்ளப் பன்றிகளின் (போர்குலா சால்வானியா - Pygmy Hog) எண்ணிக்கை, கூண்டு இனப்பெருக்கத் திட்டம் மூலம் 1996 ஆம் ஆண்டில் 6 ஆக இருந்தது, தற்போது 194 ஆக உயர்ந்துள்ளது.
  • குள்ளப் பன்றி என்பது உலகின் மிகச்சிறிய மற்றும் அரிதான காட்டுப்பன்றி இனமாகும்; IUCN செந்நிறப் பட்டியலில் இது 'மிக அருகி வரும் இனம்' என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • 1996 ஆம் ஆண்டில் அஸ்ஸாமின் மானஸ் தேசியப் பூங்காவில் இருந்து 6 குள்ளப் பன்றிகள் பிடிக்கப்பட்ட பிறகு குள்ளப் பன்றி பாதுகாப்புத் திட்டம் (PHCP) தொடங்கியது.
  • பாதுகாவலர்கள் 2008 ஆம் ஆண்டில் குள்ளப் பன்றிகளை மீண்டும் காடுகளுக்குள் அறிமுகப்படுத்தத் தொடங்கினர்; அவை இப்போது மானஸ், ஒராங், சோனை-ரூபை மற்றும் போர்னடி ஆகிய பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் காணப்படுகின்றன.
  • இத்திட்டத்தின் மூலம் 2040 ஆம் ஆண்டிற்குள் இதன் எண்ணிக்கையை 300 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் அஸ்ஸாம் வனத்துறை, டர்ரெல் வனவிலங்கு பாதுகாப்பு அறக்கட்டளை, IUCN காட்டுப்பன்றி நிபுணர் குழு, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து செயல்படுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்