குழந்தைகளின் பாலியல் சுரண்டல், துஷ்பிரயோகம் மற்றும் வன்முறையைத் தடுத்தல் மற்றும் தணிப்பதற்கான உலக தினம் – நவம்பர் 18
November 22 , 2023 614 days 281 0
இது குழந்தைகளின் பாலியல் சுரண்டல், துஷ்பிரயோகம் மற்றும் வன்முறை (CSEAV) ஆகியவற்றின் அழிவுகரமான தாக்கத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்கான உலகளாவிய முன்னெடுப்பு ஆகும்.
இந்தத் தினம் 1989 ஆம் ஆண்டில் குழந்தைகளின் பாலியல் சுரண்டல், துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைப் பிரச்சினையில் ஒரு குறிப்பிடத்தக்க முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்திய குழந்தைகளின் உரிமைகளுக்கான உடன்படிக்கை (CRC) ஏற்றுக் கொள்ளப் பட்டதை குறிக்கிறது.
1996 ஆம் ஆண்டில் ஸ்வீடன் நாட்டில் உள்ள ஸ்டாக்ஹோம் நகரில், குழந்தைககள் மீதான வணிகரீதியான பாலியல் சுரண்டலுக்கு எதிரான உலக மாநாடு நடைபெற்றது.
2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல்: ஒரு கூட்டுப் பொறுப்பு” என்பதாகும்.