குழந்தைகளுக்கான தடுப்பு மருந்து வழங்குதல் குறித்த தரவு
July 19 , 2021 1616 days 662 0
குழந்தைகளுக்கான தடுப்பு மருந்து வழங்குதல் குறித்த தரவுகளானது உலக சுகாதார அமைப்பு மற்றும் UNICEF ஆகியவற்றால் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
2020 ஆம் ஆண்டில் வழக்கமாக குழந்தைகளுக்கு வழங்கப்படும் தடுப்பு மருந்து வழங்கும் வழங்கீட்டு வீதத்தில் இந்தியா வீழ்ச்சியடைந்துள்ளதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவை அடுத்து பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியா ஆகியன உள்ளன.
இந்தியாவின் டிப்தீரியா, டெட்டனஸ் மற்றும் பெர்ட்டுசிஸ் தடுப்பு மருந்து – 3 ஆகிய மருந்துகளின் வழங்கீடானது 91 சதவீதத்திலிருந்து 85 சதவீதமாகக் குறைந்துள்ளது.