புக்கர் பரிசு அறக்கட்டளையானது குழந்தைகள் புக்கர் பரிசை அறிவித்துள்ளது.
இது AKO அறக்கட்டளையால் ஆதரிக்கப்படும் குழந்தைகள் புனைவு கதைகளுக்கான புதிய 50,000 பவுண்ட் மதிப்பினை அளிக்கும் விருதாகும்.
இந்தப் பரிசு, ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அல்லது மொழி பெயர்க்கப்பட்டு, ஐக்கியப் பேரரசு அல்லது அயர்லாந்தில் வெளியிடப்பட்ட எட்டு முதல் பன்னிரண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கான சிறந்த புனைகதைகளை கௌரவிக்கும் விதமாக வழங்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டில் தொடங்கப்பட உள்ள இது 2027 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப் படும் என்பதோடு இது இருபது ஆண்டுகளில் அந்த அறக்கட்டளையின் முதல் புதிய பரிசைக் குறிக்கிறது.