கோவிட்-19 தொற்றினால் பெற்றோர்களை இழந்த (அ) சட்டப்பூர்வ பாதுகாவலர் / வளர்ப்புப் பெற்றோர்களை இழந்த அனைத்துக் குழந்தைகளுக்கும் இத்திட்டத்தின் கீழ் உதவி வழங்கப்படும்.
முக்கிய தகவல்கள்
குழந்தையின் பெயரில் நிரந்தர வைப்பு நிதி : ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்கள் 18 வயது பூர்த்தியடையும் போது 10 லட்சம் ரூபாய் தொகுப்பு நிதி.
18 முதல் 23 வயது வரை அவர்களின் சொந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக ஐந்து ஆண்டுகளுக்கு மாதாந்திர உதவித் தொகையானது வழங்கப் படும்.
அவர்கள் 23 வயதினை அடைந்த பிறகு, தொழில் ரீதியாகவோ (அ) தனிப்பட்ட ரீதியிலோ பயன்படுத்துவதற்காக வேண்டி முழுத் தொகையான பத்து லட்சம் ரூபாயானது வழங்கப் படும்.
10 வயதிற்குக் கீழுள்ள குழந்தைகளுக்கு அருகிலுள்ள கேந்திர வித்யாலயா (அ) தனியார் பள்ளியில் தினசரி மாணக்கராக சேர்க்கப்பட அனுமதி வழங்கப்படும்.
11 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு சைனிக் பள்ளி, நவோதய வித்யாலயா போன்ற ஏதேனும் ஒரு மத்திய அரசு உறைவிடப் பள்ளியில் சேர்க்கப்பட அனுமதி வழங்கப்படும்.
தற்போதுள்ள கல்விக் கடன் விதிமுறைகளுக்கு இணங்க இந்தியாவில் தொழில்முறை கல்வி/உயர் கல்விக்கான கல்விக் கடன்களைப் பெறுவதற்கு அந்தக் குழந்தைகளுக்கு உதவி வழங்கப் படும்.
அனைத்துக் குழந்தைகளும் ரூ.5 லட்சம் சுகாதாரக் காப்பீடு வசதி அளிக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பயனாளிகளாக பதிவு செய்யப் படுவர்.