குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை முடிவிற்கு கொண்டு வருவது தொடர்பான உலகளாவிய அமைச்சர்கள் மாநாடு
November 13 , 2024 318 days 255 0
குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை முடிவிற்குக் கொண்டு வருவது தொடர்பான முதல் உலகளாவிய ரீதியிலான அமைச்சர்கள் மாநாடு ஆனது கொலம்பியா நாட்டின் பொகோட்டாவில் நடைபெற்றது.
இது UNICEF, WHO மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பொதுச்செயலகத்தின் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பிரதிநிதி அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து கொலம்பியா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளினால் நடத்தப்பட்டது.
குழந்தைகளுக்கு எதிரான வன்முறையில் அனைத்து வகையான உடல் மற்றும் / அல்லது உணர்ச்சி ரீதியான தவறான நடத்தை மற்றும் பாலியல் அத்துமீறல்கள் ஆகிய அனைத்தும் அடங்கும்.
ஒவ்வோர் ஆண்டும் சுமார் 1 பில்லியன் குழந்தைகள் உடல், உணர்ச்சி மற்றும் பாலியல் அத்துமீறல்களை எதிர் கொள்கின்றனர்.