குழந்தைகளுக்கு காசநோய் மற்றும் தொழுநோய் ஆகியவற்றிற்கான முதல்நிலைப் பரிசோதனை
September 6 , 2019 2300 days 801 0
2019 ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தொழுநோய் மற்றும் காசநோய்க்காக அனைத்து குழந்தைகளையும் முதல்நிலைப் பரிசோதனை செய்வதற்கான பெரிய அளவிலான திட்டத்தை இந்தியா மேற்கொண்டுள்ளது.
இந்த இரண்டு தொற்று நோய்களுக்காக 18 வயதிற்குட்பட்ட 25 கோடி குழந்தைகள் பரிசோதிக்கப்பட இருக்கின்றார்கள்.
ஒரு நபருக்கு இந்த இரண்டு நோய்களில் ஏதாவது ஒன்று இருப்பதாக சந்தேகிக்கப் பட்டால், அதை உறுதிப்படுத்த அந்த நபர் உயர் மையத்திற்கு அனுப்பப் படுவார்.
தற்போதுள்ள ராஷ்டிரிய பால் ஸ்வஸ்திய காரியக்ரம் (Rashtriya Bal Swasthya Karyakram - RBSK) என்பதன் உள்கட்டமைப்பு முதல்நிலைப் பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும்.