குழந்தைகளைப் பேணுவதற்கான விடுப்பு – ஆண் இராணுவ வீரர்கள்
August 11 , 2019 2188 days 701 0
ஆண் இராணுவ வீரர்களுக்கு குழந்தைகளைப் பேணுவதற்காக விடுப்பு (Child Care Leave - CCL) எடுப்பதின் பயன்களை நீட்டிப்பதற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒப்புதல் வழங்கியுள்ளார். மேலும் பாதுகாப்புப் படையில் பெண் அதிகாரிகள் இருக்கும் பட்சத்தில் CCL விதிமுறைகளில் ஒரு சிலவற்றைத் தளர்த்துவதற்கும் அவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
தற்பொழுது CCL ஆனது பாதுகாப்புப் படையில் உள்ள பெண் அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கப் படுகின்றது.
ஒரு குழந்தை 40 சதவிகிதம் மாற்றுத் திறனுடையதாக இருந்தால் CCLஐப் பெற முடியும். அந்தக் குழந்தையின் வயது வரம்பில் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் CCLஐப் பெற முடியும்.