இது 1889 ஆம் ஆண்டு நவம்பர் 14 அன்று உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத்தில் (தற்போதைய பிரயாக்ராஜ்) பிறந்த ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளைக் குறிக்கிறது.
இந்தியாவின் முதல் பிரதமரான இவர், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் 1964 ஆம் ஆண்டு மே 27 வரை அப்பொறுப்பில் பணியாற்றினார்.
இங்கிலாந்தில் உள்ள ஹாரோ பள்ளி மற்றும் கேம்பிரிட்ஜ் டிரினிட்டி கல்லூரியில் கல்வி பயின்ற இவர், பின்னர் லண்டனில் உள்ள இன்னர் டெம்பிளில் சட்டம் பயின்றார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற இவர், காந்தியுடன் இணைந்து பணியாற்றியதுடன், பூரண சுயராஜ்ஜியத்தைத் தனது இலக்காக ஏற்றுக்கொண்ட 1929 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸின் லாகூர் மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார்.
அறிவியல் வளர்ச்சி, உயர்கல்வி, தொழில்மயமாக்கல் மற்றும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் அணிசேராக் கொள்கை ஆகியவற்றை இவர் ஊக்குவித்தார்.
1955 ஆம் ஆண்டில் பாரத ரத்னா விருது பெற்ற இவர், குழந்தைகள் மீது கொண்ட அன்பின் காரணமாக ‘சாச்சா நேரு’ என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.