"Healthy Women, Empowered Families" பிரச்சாரத்தின் போது, சத்தீஸ்கரில் உள்ள சூரஜ்பூர் மாவட்ட நிர்வாகமானது 75 கிராமப் பஞ்சாயத்துகளை "குழந்தைத் திருமணம் இல்லாதவையாக" அறிவித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தப் பஞ்சாயத்துகளில் குழந்தைத் திருமண வழக்குகள் எதுவும் பதிவாகாததை அடுத்து இந்த அந்தஸ்து வழங்கப்பட்டது.
விழிப்புணர்வுப் பிரச்சாரங்களில் அங்கன்வாடி பணியாளர்கள், பஞ்சாயத்துப் பிரதிநிதிகள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் சமூகங்கள் பங்கேற்றனர்.
இந்த முன்னெடுப்பு ஆனது, குழந்தை உரிமைகள், தாமதமான திருமணங்கள் மற்றும் பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவித்தது என்ற நிலையில் இதன் விளைவாக அந்தப் பகுதிகளில் மேம்பட்ட சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து விளைவுகள் பதிவாகச் செய்தன.
இந்த வெற்றியானது யுனிசெஃப் அமைப்பின் ஆதரவுடன் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்ட மாநிலத்தின் பரந்த அளவிலான "குழந்தைத் திருமணம் இல்லாத சத்தீஸ்கர் பிரச்சாரத்துடன்" ஒன்றி வந்தது.