TNPSC Thervupettagam

குழந்தைத் தொழிலாளர் குறித்த உலகளாவிய மதிப்பீட்டு அறிக்கை – 2020

June 13 , 2021 1496 days 688 0
  • சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் யுனிசெப் ஆகியவை இணைந்து குழந்தைத் தொழிலாளர் குறித்த ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளன.
  • கடந்த இருபது ஆண்டுகளில் உலகளவில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • கொரோனா வைரசினால் ஏற்பட்ட நெருக்கடி நிலையினால் மேலும் பல மில்லியன் கணக்கான இளம் குழந்தைகள் தொழிலில் ஈடுபடும் நிலை உள்ளது என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கையானது 160 மில்லியனாக உள்ளது.
  • நான்கு வருடங்களில் இதன் எண்ணிக்கையானது  8.4 மில்லியன் அதிகரித்துள்ளது.
  • துணை சஹாரா ஆப்பிரிக்கா தான் உலகில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதியாகும்.
  • சிறுவர்களே அதிகம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
  • 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் குழந்தைத் தொழிலில் ஈடுபட்ட 160 மில்லியன் குழந்தைகளில் 97 மில்லியன் குழந்தைகள் சிறுவர்களாவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்