குழந்தைத் தொழிலாளர் தொழிலாளர் முறைக்கு எதிரான உலக தினம் - ஜூன் 12
June 14 , 2024 402 days 227 0
குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான ஒரு உலகளாவிய அழைப்பை ஊக்குவிப்பதையும் விரிவுபடுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) 2022 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதியன்று குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான முதல் உலக தினத்தைக் கொண்டாடியது.
2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “Let’s Act on Our Commitments: End Child Labour” என்பதாகும்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) ஆனது, 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை அபாயகரமான வேலைகளில் ஈடுபடுத்தக்கூடாது என வரையறுக்கிறது.
இந்தியாவில், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சுரங்கங்கள், தொழிற்சாலைகள் அல்லது அபாயகரமான தொழில்களில் பணி புரிவதை அரசியலமைப்பு சாசனமானது வெளிப்படையாகத் தடை செய்கிறது.