இந்திய இரயில்வே நிர்வாகமானது தனது இரயில்களில் 'குழந்தைப் படுக்கை வசதியை' சேர்த்துள்ளது.
இந்த அசாதாரண அமைப்பு பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு அருகில் நிம்மதியாக தூங்கிக் கொண்டே இரயிலில் பயணிக்க வழி வகை செய்யும்.
அன்னையர் தினத்தன்று, வடக்கு இரயில்வேயின் லக்னோ பிரிவானது, 194129/B4 என்ற எண் கொண்ட ஒரு பெட்டியில், 12வது எண் மற்றும் 60வது எண் என்று குறிப்பட்ட இருக்கைகளில் குழந்தைப் படுக்கை வசதியை நிறுவி அதனைப் பரிசோதித்தது.