March 15 , 2026
14 hrs 0 min
35
- இந்தியாவில் குழந்தைப் பருவ உடல்பருமனை ஒழிக்க WHO அறக்கட்டளை மற்றும் நோவோ நார்டிஸ்க் ஆகியவை கைகோர்த்துள்ளன.
- இந்த முன்னெடுப்பானது பள்ளிகள் சார்ந்த சுகாதாரத் திட்டங்கள் மற்றும் விழிப்பு உணர்வு பிரச்சாரங்களைச் செயல்படுத்தும்.
- குழந்தைகளிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சமச்சீர் உணவு மற்றும் உடல் செயல்பாடுகளை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்தத் திட்டம் ஆரோக்கியம் சார்ந்த இடர்களை முன்கூட்டியே கண்டறிவதற்கும், ஆரம்ப சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துவதற்கும் உதவும்.
- உடல்பருமன் என்பது இதய நோய்கள் மற்றும் நீரிழிவு நோய் வகை 2 போன்ற தொற்றாத நோய்களுடன் தொடர்புடையது.
Post Views:
35