TNPSC Thervupettagam

குழந்தை திருமண ஒழிப்புத் திட்டம்

December 9 , 2025 3 days 30 0
  • ஓராண்டிற்குள் தீவிர குழந்தைத் திருமண ஒழிப்பு இயக்கத்திற்காக தெலுங்கானா 26 அதிக ஆபத்துள்ள மாவட்டங்களைக் குறித்துள்ளது.
  • இந்த முன்னெடுப்பு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் (MWCD) "பால் விவாஹ் முக்த் பாரத்" பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.
  • 250க்கும் மேற்பட்ட அரசு சாரா நிறுவனங்களின் (NGO) கூட்டணியான ஜஸ்ட் ரைட்ஸ் ஃபார் சில்ட்ரன் (JRC), இந்தத் திட்டத்தை ஆதரிக்கிறது.
  • தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு V (NFHS-V, 2019–21) ஆனது, தெலுங்கானாவில் 23.5% பெண்கள் 18 வயதுக்கு முன் திருமணம் செய்து கொண்டதாகக் காட்டுகிறது.
  • கடந்த ஆண்டில் தெலுங்கானாவில் சுமார் 10,518 குழந்தை திருமணங்களையும், நாடு முழுவதும் 1 லட்சத்திற்கும் அதிகமான குழந்தை திருமணங்களையும் JRC தடுத்தது.
  • 100 நாட்கள் அளவிலான இந்தச் செயல் திட்டத்தில் பள்ளிகள், சமய தளங்கள், திருமண சேவை வழங்குநர்கள் மற்றும் உள்ளூர்ச் சமூகங்களில் விழிப்புணர்வு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்