குழந்தைகளுக்கான முன்கூட்டிய மற்றும் கட்டாயத் திருமணங்களை ஒழிப்பதற்கான சர்வதேச தினமாக நவம்பர் 27 ஆம் தேதியை ஐக்கிய நாடுகள் சபை (UN) அறிவித்து உள்ளது.
2024 ஆம் ஆண்டு நவம்பர் 27 அன்று ‘பால் விவா முக்த் பாரத்’ (குழந்தை திருமணமில்லா இந்தியா) பிரச்சாரம் தொடங்கப்பட்டதால் இந்த தேதி இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்த பிரச்சாரம் 2023 ஆம் ஆண்டில் NDTV மற்றும் Just Rights for Children ஆகியவற்றால் தொடங்கப் பட்டது, அதே நேரத்தில் Just Rights for Children நிறுவனர் புவன் ரிபு ஐ.நா. தீர்மானத்தை முன்மொழிந்தார்.
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5-இன்படி (NFHS-5), 20-24 வயதுடைய பெண்களில் 23.3% பேர் 18 வயதிற்கு முன்பே திருமணம் செய்துள்ளனர்; NFHS-6-இன்படி (2023-24) 20.1% ஆக பதிவாகியுள்ளது.
2026 ஆம் ஆண்டிற்குள் குழந்தை திருமணத்தின் பரவலை 10% குறைக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது, அதே நேரத்தில் நிலையான வளர்ச்சி இலக்கு (SDG) 5, இலக்கு 5.3 ஆனது 2030 ஆம் ஆண்டிற்குள் குழந்தைகளுக்கான முன்கூட்டிய மற்றும் கட்டாய திருமணத்தை ஒழிக்க வலியுறுத்துகிறது.