குவாட் நாடுகளின் முக்கிய கனிமங்கள் திட்டம்
- குவாட் நாடுகளின் குழுவானது, முக்கிய கனிம விநியோகத்தைச் சீரான நிலையில் வைத்திருப்பதற்காக ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
- வாஷிங்டன் D.C. நகரில் நடைபெற்ற வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்குப் பிறகு இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது.
- மின்னணு கழிவுகளைக் கையாள்வது மற்றும் சில முக்கியக் கனிமங்களை மறுசுழற்சி செய்வதும் இதில் அடங்கும்.
- நாற்கரப் பாதுகாப்பு பேச்சுவார்த்தை (குவாட்) என்பது இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஒரு முறைசாரா உத்தி சார் மன்றமாகும்.
- இது மிகச் சுதந்திரமான, தடையற்ற மற்றும் வளமான இந்திய-பசிபிக் பிராந்தியத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது.

Post Views:
42