TNPSC Thervupettagam

குவாரித் திட்டத்தின் மறுஆய்வு

March 7 , 2026 4 days 48 0
  • வல்லநாடு புல்வாய் (Blackbuck) சரணாலயத்திற்கு அருகிலுள்ள குவாரி திட்டத்தை மறு பரிசீலனை செய்யுமாறும், அதே நேரத்தில் புல்வாய்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டது.
  • கடுமையான வனவிலங்குப் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இத்திட்டத்தை மீண்டும் மறுபரிசீலனை செய்யுமாறு தமிழகத்தின் மாநிலச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு (SEIAA) தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
  • முன்மொழியப்பட்ட கல் மற்றும் சரளைக் குவாரி சுமார் 6.02 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் சரணாலயத்திலிருந்து சுமார் 1.7–1.9 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
  • புல்வாய் (இந்திய மறிமான்) 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் அட்டவணை I இன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது என்பதோடு இது மிக உயர்ந்த அளவிலான சட்டப் பாதுகாப்பை வழங்குகிறது.
  • முக்கியமாக புல்வாய்களைப் பாதுகாப்பதற்காக நிறுவப்பட்ட இந்தச் சரணாலயம் சுமார் 16.41 சதுர கிலோமீட்டர் வறண்ட புதர்க்காடுகளை உள்ளடக்கியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்