கூடலூரில் புதிதாக அறிவிக்கப்பட்ட காப்புக் காட்டில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு குறிஞ்சி (ஸ்ட்ரோபிலாந்தஸ் செசிலிஸ்) மலர்ந்துள்ளன.
இந்த மலர்தல் நிகழ்வானது, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் புல்வெளிகள் மீண்டும் புத்துயிர் பெறுவதை குறிக்கின்றன மற்றும் மாறி வரும் பருவநிலை வடிவங்களைப் பிரதிபலிக்கின்றன.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி (ஸ்ட்ரோபிலாந்தஸ் குந்தியானா) போலல்லாமல், செசிலிஸ் இனம் ஆனது 8 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும்.
நீலகிரியில் ஊதா, நீலம், வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு என பல்வேறு நிறங்களில் 33 குறிஞ்சி வகைகள் காணப் படுவதாக தாவரவியலாளர்கள் அடையாளம் கண்டு உள்ளனர்.