கூடுதல் நீதிபதிகளின் உத்தரவுகளைப் பரிசீலனை செய்ய குழு
October 29 , 2017 2807 days 967 0
உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளை நிரந்தரமாக்குவதற்கு , உச்ச நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து கூடுதல் நீதிபதிகளின் தீர்ப்புகளை மதிப்பிட நீதிபதிகள் நியமனக் குழு முடிவெடுத்துள்ளது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை தலைமையில் நீதிபதிகள் நியமனக் குழு இயங்குகின்றது.
கூடுதல் நீதிபதிகளின் நீதித்துறை செயல்பாட்டை மதிப்பிடும் நடைமுறையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான திட்டத்தை மறுபரிசீலிக்க சமீபத்தில் நீதிபதிகள் நியமனக் குழுவிற்கு அரசாங்கம் அறிவுறுத்தி இருந்தது..
ஒரு வேட்பாளர் முதலில் உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.
நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்பாக அவர் தகுதிகாண் காலத்தில் பணி செய்வர்.