இந்தோ - திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் பொது இயக்குநரான S.S. தேஸ்வால் என்பவருக்கு தீவிரவாத எதிர்ப்புப் படையான தேசிய பாதுகாப்புப் படையின் (National Security Guard - NSG) இயக்குநர் என்ற கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவர் 2019 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி ஓய்வு பெற்ற NSGயின் பொது இயக்குநரான சுதீப் லக்டாக்கியா என்பவரிடமிருந்து இந்த பொறுப்பைப் பெற்றார்.
NSGயின் பொது இயக்குநர் என்ற பதவியானது இந்தியக் காவல் பணி அதிகாரியினால் நிரப்பப் படுகின்றது. SS தேஸ்வால் என்பவர் தெலுங்கானா பணிப் பிரிவிவைச் சேர்ந்த 1984 ஆம் ஆண்டு இந்தியக் காவல் பணி அதிகாரியாவார்.
இதுபற்றி
NSG ஆனது உள்நாட்டுப் பிரச்சினைகள் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றிலிருந்து மாநிலங்களைப் பாதுகாப்பதற்காக 1984 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகின்றது.
இது தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை அதன் அனைத்து வடிவங்களிலும் கையாளுகின்றது.