பெங்களூரு மேம்பாட்டு ஆணையம் (BDA) சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் கூட்டுக் கலந்தாலோசிப்பு வழக்கு குறித்து இந்திய உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தியுள்ளது.
பெங்களூருவின் வடக்கு தாலுக்காவில் 3 ஏக்கர் மற்றும் 33 குண்டா பரப்பிலான நிலம் தொடர்பான நடவடிக்கைகளை நீதிமன்றம் ஆய்வு செய்தது.
இந்திய அரசியலமைப்பின் 32வது சரத்தின் கீழ் ஒரு நீதிப் பேராணை மனுவைப் பதிவு செய்ய நீதிமன்ற பதிவாளருக்கு அமர்வு உத்தரவிட்டது.
மனுதாரர் S.V. விஜயலட்சுமி & பிறருக்கு எதிரான மோசடி மற்றும் பிற குற்றங்கள் தொடர்பான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து ஜூலை 31 ஆம் தேதியன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வழக்கில் முழுமையான நீதியை உறுதி செய்வதற்காக அரசியலமைப்பின் 142வது சரத்தின் கீழ் நீதிமன்றம் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தியது.
பெங்களூரு மேம்பாட்டு ஆணையத்திற்கும், மேல்முறையீட்டாளர்களுக்கும் இடையிலான கூட்டுக் கலந்தாலோசிப்பு செயல்முறை காரணமாக சாதாரணக் குடி மக்களுக்கு நிலம் கையகப்படுத்துதலின் நன்மைகள் மறுக்கப்பட்டதாக நீதிமன்றம் கண்டறிந்தது.
பிரியங்கா ஸ்ரீவஸ்தவா மற்றும் உத்தரப் பிரதேச மாநில அரசு இடையிலான (2015) வழக்கின் படி, ஆதாரமாக அமையும் உறுதி/பிரமாணப் பத்திரத்தைச் சமர்ப்பிக்கத் தவறியது ஒரு சரி செய்யக் கூடிய பிழையாகும், ஆனால் ஒரு நீதிபதி ஒரு உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்பு அதை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று அது தெளிவு படுத்தியது.
கூட்டுக் கலந்தாலோசிப்பு வழக்கு என்பது கட்சிதாரர்கள் ஒருவருக்கொருவர் உண்மையாக எதிர்ப்பதற்குப் பதிலாக ஒத்துழைப்பினை மேற்கொண்டு வழக்காடும் வழக்குகளைக் குறிக்கிறது.
கட்சிதாரர்கள் அவர்களுக்கு ஏதுவான முடிவை அடைய அல்லது உண்மையான வழக்காடல் இல்லாமல் சட்டங்களைச் சவால் செய்ய ஒன்றாகச் செயலாற்றுகின்றன.