TNPSC Thervupettagam

கூட்டு கார்பன் மதிப்பு வழங்கீட்டுச் செயல்முறை (JCM)

September 3 , 2025 19 days 75 0
  • குறைவான கார்பன் உமிழ்வு கொண்ட தொழில்நுட்பங்களுக்கான ஒப்பந்தத்தில் இந்தியா ஜப்பானுடன் இணைந்து கையெழுத்திட்டுள்ளது.
  • இது இந்தியாவில் பசுமை இல்ல வாயு குறைப்பு அல்லது நீக்கம் மற்றும் நிலையான மேம்பாட்டிற்கு பங்களிக்கும் திட்டங்களை செயல்படுத்துவதை எளிதாக்கும்.
  • இது அதன் வகையான முதல் கூட்டு கார்பன் மதிப்பு வழங்கீட்டுச் செயல்முறையாகும் (JCM).
  • JCM என்பது ஒரு ஜப்பானிய முன்னெடுப்பு ஆகும்.
  • ஜப்பான் நாடானது வளர்ந்து வரும் நாடுகளில் குறைந்த கார்பன் உமிழ்வு கொண்ட தொழில்நுட்பங்களைச் செயல்படுத்தி முதலீடு செய்கிறது.
  • இதன் விளைவாக உருவாகும் உமிழ்வுச் சேமிப்புகள் ஜப்பானின் கணக்கில் கார்பன் மதிப்புகளாக வரவு வைக்கப்படுகின்றன.
  • இந்தியாவை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், அதன் தேசிய அளவிலான உமிழ்வு-குறைப்பு இலக்குகளை அடைய இதனைப் பயன்படுத்தலாம்.
  • ஜப்பான் பல்வேறு செயல்படுத்தல் நிலைகளில் உள்ள 30 பிற நாடுகளுடன் JCM ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
  • இது பாரிசு உடன்படிக்கையின் 6.2வது பிரிவின் கீழ் இதே போன்ற வழிகளில், இந்தியாவின் NDC (தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்பு) உறுதிமொழிகளை "அதிகளவில் பாதிக்காமல்", ஜப்பான் மற்றும் பிற நாடுகளுடனான அத்தகையத் திட்டங்களிலிருந்து உருவாக்கப்படும் கார்பன் மதிப்புகளின் சர்வதேச வர்த்தகத்தையும் இது செயல்படுத்தும்.
  • இந்தியாவின் NDC ஆனது,
    • 2005 ஆம் ஆண்டு உமிழ்வு நிலைகளிலிருந்து 2030 ஆம் ஆண்டிற்குள் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் உமிழ்வுச் செறிவினை 45% குறைத்தல்,
    • 2030 ஆம் ஆண்டிற்குள் புதைபடிவ எரிபொருள் சாராத மூலங்களிலிருந்து 50% ஒட்டுமொத்த மின்சார உற்பத்தித் திறனை அடைதல், மற்றும்
    • 2030 ஆம் ஆண்டிற்குள் காடு வளர்ப்பு மூலம் 2.5-3 பில்லியன் டன் வரையிலான கார்பன் டை ஆக்சைடுக்குச் சமமான கூடுதல் கார்பன் உறிஞ்சு பகுதியை உருவாக்குதல் ஆகியவற்றிற்கு உறுதி பூண்டுள்ளது.
  • மேலும் இந்த வாரத் தொடக்கத்தில், சுற்றுச்சூழல் அமைச்சகமானது, 'தேசிய அளவில் நியமிக்கப்பட்ட ஆணையத்தினை (NDA) அமைத்தது.
  • NDA என்பது அத்தகையத் திட்டங்களை அங்கீகரிப்பதற்கும், உமிழ்வுக் குறைப்புகளை மதிப்பிடுவதற்கும், இந்தியக் கார்பன் சந்தையின் செயல்பாட்டை மேற்பார்வையிடச் செய்வதற்குமான முதன்மை நிறுவனமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்