இந்தியா மற்றும் பிரான்சு ஆகிய நாடுகள் மூன்றாவது கூட்டு விண்வெளித் திட்டத்திற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இஸ்ரோ மற்றும் பிரான்சின் விண்வெளி நிறுவனமான CNES (National Centre for Space Studies) ஆகியவை இணைந்து இதுவரை இரண்டு கூட்டு விண்வெளித் திட்டத்தினை மேற்கொண்டுள்ளன.
முதல் திட்டம் 2011 ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட்ட “மெகா டிராபிக்ஸ்” மற்றும் மற்றொன்று 2013 ஆம் ஆண்டில் ஏவப்பட்ட “சாரல் - அல்டிகா” ஆகியனவாகும்.