TNPSC Thervupettagam

கேரளா தொலைநோக்குப் பார்வை 2031

June 15 , 2026 7 days 77 0
  • கேரள மாநிலத்தை இந்தியாவின் மிகவும் பெண்களுக்கு உகந்த மாநிலமாக மாற்றுவதற்கான ஒரு கொள்கை வழிகாட்டுதலான ‘தொலைநோக்குப் பார்வை 2031’ திட்டத்தை கேரள அரசு முன்மொழிந்துள்ளது.
  • பெண்களுக்கு எதிரான குறிப்பிட்ட குற்றங்களுக்கு 21 நாட்களுக்குள் விரைவான விசாரணை நடத்துவதற்கு, ஆந்திரப் பிரதேசத்தின் திஷா சட்டத்தின் வழியில் ஒரு சட்டத்தை இக்கொள்கை முன்மொழிகிறது.
  • இது பேரிடர் எச்சரிக்கை செயலி, இரவு பயணத்திற்கான இளஞ்சிவப்புநிறப் பேருந்துகள் மற்றும் 2026 ஆம் ஆண்டு ஜூன் 15 முதல் கேரள மாநிலச் சாலைப் போக்குவரத்து கழக (KSRTC) சாதாரண பேருந்துகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச பயணத்தை வழங்கும் பிரியதர்ஷினி திட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • குடும்ப வன்முறை மற்றும் வரதட்சணை கொடுமையைத் தடுப்பதையும், பெண் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதையும் 'அவள்கொப்பம்' எனும் முன்னெடுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ₹25,401 கோடி மொத்த திட்ட ஒதுக்கீட்டில், 2026-27 ஆம் ஆண்டிற்கான கேரளாவின் பாலின பட்ஜெட் ₹5,586.99 கோடியாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்