August 18 , 2025
3 days
29
- கேரள மாநில நிதி நிறுவனம் (KSFE) ஆனது, இந்தியாவில் 1 லட்சம் கோடி ரூபாய் வணிக வருவாயைக் கடந்த முதல் இதர வங்கி சாரா நிதி நிறுவனமாக (NBFC) மாறியது.
- KSFE நான்கு ஆண்டுகளில் 50,000 கோடி ரூபாயிலிருந்து 1 லட்சம் கோடி ரூபாயாக தனது வணிகத்தை இரட்டிப்பாக்கியது.
- 2024-25 ஆம் நிதியாண்டில் இந்த நிறுவனம் 512 கோடி ரூபாய் இலாபத்தை ஈட்டியது.
- KSFE ஆனது வட்டித் தள்ளுபடிகள் மூலம் 504 கோடி ரூபாய் நிதி உதவியை வழங்கியது மற்றும் கேரள மாநில அரசுக்கு 920 கோடி ரூபாய் பங்களித்தது.
- KSFE மாநிலக் கருவூலத்தில் சுமார் 8,925 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலையான வைப்புத் தொகைகளைக் கொண்டுள்ளது.
- கேரள மாநில முதல்வர் கொண்டாட்டங்களைத் தொடங்கி வைத்து "KSFE: The Courage of Kerala" என்ற KSFE நிறுவனத்தின் புதிய வாசகத்தினையும் வெளியிட்டார்.
Post Views:
29