கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் 2023
February 15 , 2023 808 days 467 0
மூன்றாவது ஆரம்ப நிலை அளவிலான இப்போட்டியானது, பிப்ரவரி 14 ஆம் தேதியன்று ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்மார்க் நகரில் நிறைவடைந்தது.
ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் 32 மாநிலங்கள், ஒன்றியப் பிரதேசங்கள் மற்றும் பிற பிரிவுகளைச் சேர்ந்த 11 விளையாட்டுப் போட்டிகளில் 1,500 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்தப் போட்டியின் முடிவில் அதிக தங்கப் பதக்கங்களைப் பெற்ற மாநிலம் அல்லது ஒன்றியப் பிரதேசம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது.
2023 ஆம் ஆண்டு கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் 26 தங்கம், 25 வெள்ளி மற்றும் 25 வெண்கலத்துடன் ஜம்மு & காஷ்மீர் முதலிடத்தைப் பிடித்தது.
இதில் 13 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்களுடன் மகாராஷ்டிரா அணி இரண்டாவது இடத்தைப் பிடித்தது.