TNPSC Thervupettagam

கேலோ இந்தியா கைபேசி செயலி

February 28 , 2019 2292 days 702 0
  • புதுதில்லியில் நடைபெற்ற இளைஞர் பாராளுமன்ற விழாவில் கேலோ இந்தியா கைபேசி செயலியை பிரதமர் வெளியிட்டார்.
  • இந்த செயலி இந்திய விளையாட்டு ஆணையத்தால் மேம்படுத்தப்பட்டதாகும்.
  • இது குறிப்பாக இளைய சமுதாயத்தினரிடையே விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியின் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுகின்றது.
  • இது குழந்தைகள் மத்தியில் தகுதி வாய்ந்த சாம்பியன்களை அடையாளம் கண்டிட மூன்று சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கின்றது.
    • முதல் அம்சம் 18 வகையான விளையாட்டுக்களைப் பற்றிய ஒழுங்குமுறைகள் மற்றும் அடிப்படை விதிமுறைகள் பற்றி பயனாளிகளுக்கான தகவல்களை அளிக்கின்ற ஆரம்பநிலைக் கையேடு ஆகும்.
    • இரண்டாவது அம்சம் நாடு முழுவதுமான விளையாட்டு வசதிகள் பற்றிய தகவல்களை உள்ளடக்கியதாகும்.
    • மூன்றாவது அம்சம் இளைய தடகள வீரரின் உடற்தகுதியினைத் தெரிந்து கொள்ள எடுக்கப்படும் 8 தேர்வுகளைக் கொண்டிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்