3வது வருடாந்திர கோவா கடல்சார் மாநாடானது (GMC-21) கோவாவில் தொடங்கியது.
இந்த மாநாட்டில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தைச் சேர்ந்த 12 நாடுகளின் கடற்படைத் தலைவர்களுக்கு இந்தியா தலைமை தாங்கும்.
கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் இந்த மாநாட்டிற்குத் தலைமை தாங்குவார்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உருவாகி வரும் மற்றும் எதிர்கால கடல்சார் பாதுகாப்பு சவால்களைத் திறம்பட கையாள்வதற்கான இயங்குந்தன்மையின் ஒரு முக்கியத்துவம் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.
இந்த மாநாட்டின் கருத்தரு "கடல் பாதுகாப்பு மற்றும் வளர்ந்து வரும் மரபற்ற புது அச்சுறுத்தல்கள்: இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் செயலூக்கமிக்கப் பங்களிப்பிற்கான ஒரு வாய்ப்பு" (Maritime Security and Emerging Non-Traditional Threats: A case for proactive role for Indian Ocean Region) என்பதாகும்.