கைதிகளுக்கு வாக்களிக்கும் உரிமை கோரும் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
வாக்களிக்கும் உரிமையானது ஒரு அடிப்படை உரிமை அல்லது பொதுவான சட்ட உரிமை அல்ல. இந்த உரிமையானது சட்டத்தால் மட்டுமே வழங்கப்படுகின்றது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள எந்தவொரு நபரும் தேர்தலில் வாக்களிக்க முடியாது என்று 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 62 (5) கூறுகின்றது .
ஐரோப்பா, சுவிட்சர்லாந்து, பின்லாந்து, நார்வே, டென்மார்க், அயர்லாந்து, பால்டிக் நாடுகள் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் ஏற்கனவே கைதிகள் வாக்களிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.