கைதிகள் விடுதலை குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு
February 24 , 2025 208 days 184 0
கைதிகள் தாங்கள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட விண்ணப்பிக்காவிட்டாலும், அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து அரசு பரிசீலிக்குமாறு உச்ச நீதிமன்றம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.
சில வகையான குற்றவாளிகளுக்கான விதிவிலக்குகளுடன், BNSS மற்றும் CrPC- 1973 ஆகியவற்றின் கீழ் அந்த தண்டனை முடிவதற்குள் சில கைதிகளை விடுவிக்க வேண்டி மாநிலங்களுக்கு அதிகாரம் உண்டு.
ஒரு கடும் குற்றத்தில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட ஒருவருக்கு வழங்கப்பட்ட தண்டனைக் காலத்தைக் குறைக்கும் அதிகாரத்தினைத் தண்டனைக் குறைப்பு மீதான அதிகாரம் குறிக்கிறது.
BNSS சட்டத்தின் 473வது பிரிவு (மற்றும் CrPC சட்டத்தின் பிரிவு 432) மாநில அரசுகளுக்கு "எந்த நேரத்திலும்" தண்டனையை விடுவிக்கும் அதிகாரத்தினை வழங்குகிறது.
மாநில அரசுகளால் வழங்கப்பட்ட விடுதலையை ரத்து செய்து, பிடியாணை எதுவும் இல்லாமல் குற்றவாளியை மீண்டும் கைது செய்யலாம்.
அரசியலமைப்பின் 72வது மற்றும் 161வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் ஆகியோரின் தண்டனைக் குறைப்பு அதிகாரத்திலிருந்து இது வேறுபட்டது.