கைது செய்யப்பட்ட மற்றும் காணாமல் போன பணியாளர்களுக்கான சர்வதேச ஒன்றிணைவு தினம் - மார்ச் 25
March 29 , 2023 916 days 296 0
ஐக்கிய நாடுகளின் பணி சார்பாக ஈடுபட்டிருந்த அலெக் கோலெட் என்ற ஊடகவியலாளர் கடத்தப்பட்ட நாளினை நினைவு கூரும் வகையில் இந்த தினமானது அனுசரிக்கப்படுகிறது.
அலெக் கோலெட் கடத்தப்பட்டதன் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்தத் தினமானது மார்ச் 25 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.
இவர் ஒரு முன்னாள் பத்திரிகையாளர் ஆவார் என்பதோடு, அவர் அண்மைக் கிழக்கு நாடுகளில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண மற்றும் பணி முகமையில் (UNRWA) பணியாற்றினார்.
1985 ஆம் ஆண்டில் ஆயுதமேந்திய நபர்களால் இவர் கடத்தப்பட்டார்.
2009 ஆம் ஆண்டில், இவரது உடல் லெபனானின் பெக்கா என்ற பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப் பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்களைப் பாதுகாப்பதற்கான தீர்மானம் ஆனது முதன்முதலில் 1993 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையினால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.