TNPSC Thervupettagam
July 26 , 2025 12 hrs 0 min 19 0
  • 2024 ஆம் ஆண்டின் தேசிய அளவிலான கைத்தறி விருதுகளுக்கு ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மூன்று நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  • ஆகஸ்ட் 07 ஆம் தேதியன்று புது டெல்லியில் நடைபெற உள்ள 11வது தேசிய கைத்தறி தின விழாக் கொண்டாட்டத்தின் போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களால் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன.
  • சந்த் கபீர் கைத்தறி விருதைப் பெறும் ஐந்து மாநிலங்களில் ஆந்திரப் பிரதேசமும் ஒன்றாகும்.
  • இத்துறையின் வளர்ச்சிக்கு மிகவும் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கிய சிறந்த கைத்தறி நெசவாளர்களை அங்கீகரிப்பதற்காக இது வழங்கப்படுகிறது.
  • சந்த் கபீர் கைத்தறி விருதுக்கு லக்கா ஸ்ரீனிவாசுலு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
  • கர்னாட்டி முரளி மற்றும் ஜுஜாரே நாகராஜு மற்ற இருவர் 2024 ஆம் ஆண்டிற்கான தேசியக் கைத்தறி விருதுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
  • வெங்கடகிரி ஜாம்தானி புடவைகள் தொடர்பான அவரது பணிக்காக வேண்டி லக்கா ஸ்ரீனிவாசுலு இந்த விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இதற்கிடையில், பல் முக்கோண வடிவில் மடிக்கப்பட்டு நிறமேற்றப்படும் (Multi Diamond Tie and Dye Silk Saree) பட்டுச் சேலை மற்றும் அதன் வடிவமைப்பு உருவாக்கத்திற்கான பங்களிப்புக்காக முறையே கர்னாட்டி முரளி மற்றும் J. நாகராஜு ஆகியோர் இந்த விருதைப் பெறுவார்கள்.
  • சந்த் கபீர் விருது பெறுபவருக்கு 3.5 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு, ஒரு தங்க நாணயம், ஓர் அங்கீகாரச் சான்றிதழ் மற்றும் ஒரு சால்வை வழங்கப்படும்.
  • தேசியக் கைத்தறி விருது பெறுபவருக்கு 2 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு, ஒரு சான்றிதழ் மற்றும் ஒரு சால்வை வழங்கப்படும்.
  • இது ஜவுளி அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்