கைபேசி சொந்தமுடமையில் அதிக பாலின இடைவெளி - இந்தியா
August 8 , 2018 2690 days 910 0
சமீபத்தில் LIRNEAsia வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ஒப்பிடக்கூடிய 18 நாடுகளில் இந்தியாவானது கைபேசி சொந்தமுடமையில் அதிக பாலின இடைவெளியைக் கொண்டுள்ளது என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
இணையத்தைப் பெண்கள் அணுகுவதில் இந்தியா மற்ற நாடுகளை விட கீழ் நிலையில் உள்ளது.
LIRNEAsia ஆனது தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத் திட்டத்தின் (ICT - Information and Communication Technology) சிந்தனைச் சாவடி ஆகும். இது 2005ஆம் ஆண்டு முதல் ஆசியா-பசிபிக்கில் ஏழைகளுக்கு ஆதரவான, சந்தைகளுக்கு ஆதரவான ஆராய்ச்சிகளில் பங்கெடுத்து வருகிறது.
இந்தியாவில் ஒட்டு மொத்தமாக 80 சதவீத ஆண்களிடம் கைபேசி உள்ளது. ஆனால் ஆண்களுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் 43 சதவீத பெண்களிடம் மட்டுமே கைபேசி உள்ளன. இதற்குக் காரணம் போதிய விழிப்புணர்வு இல்லாததே ஆகும்.
இந்த வித்தியாசமானது இந்தியாவை பாகிஸ்தான், வங்காள தேசம் ரவாண்டா உள்பட மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது பாதியளவு விஞ்சியிருக்கிறது என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்த பாலின இடைவெளியானது கிராமப்புறங்களில் 52 சதவீதமாக உள்ளது. நகர்ப்புறங்களில் பாலின இடைவெளியானது 34 சதவீதமாக உள்ளது.
இந்தியாவில் மொத்தமுள்ளவர்களில் 64 சதவீதத்தினர் இணையத்தைப் பற்றி அறியாதவர்களாக உள்ளனர். இது மற்ற நாடுகளுடன் (பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்தைத் தவிர) ஒப்பிடும் போது அதிகமான சதவீதம் கொண்டுள்ளது.
இந்தியாவில் இணையப் பயன்பாடு 19 சதவீதமாகும். (நைஜுரியா, கானா, கென்யா மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளை விடக் குறைவு)