TNPSC Thervupettagam

கைலாஷ் மானசரோவர் யாத்திரை

June 14 , 2019 2229 days 803 0
  • இந்த ஆண்டின் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக, புது தில்லியிலிருந்து முதலாவது பிரிவு புனிதப் பயணத்தை வெளியுறவுத் துறை அமைச்சர் S. ஜெய்சங்கர் தொடங்கி வைத்தார்.
  • புனிதப் பயண ஏற்பாட்டிற்காக தில்லியில் மேற்கொள்ளப் படும் 3 நாள் பணிகள் உள்பட ஒவ்வொரு பிரிவுக்கும் புனிதப் பயணத்திற்கான காலம் 24 நாட்களாகும்.
  • இந்தப் புனிதப் பயணம் 1981 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
  • கைலாஷ் மானசரோவர் யாத்திரை பின்வரும் இரண்டு பாதைகளில் மேற்கொள்ளப் படுகின்றது.
    • உத்தரகாண்டில் உள்ள லிபுலேக் கணவாய் - மலைப் பகுதியின் வழியாக இந்தப் பாதை செல்கின்றது.
    • சிக்கிமில் உள்ள நாதுல்லா கணவாய் - முழுவதும் வாகனத்தினால் பயணிக்கக்கூடிய பாதை. மூத்த குடிமக்களுக்கு இப்பாதை உதவிகரமாக இருக்கும்.
  • இந்த யாத்திரை இந்தியா, நேபாளம் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் எல்லைகளை கடந்து செல்லக் கூடிய ஒரு சிக்கலான பாதையைக் கொண்டுள்ளது.
  • தில்லி, உத்தரகாண்ட் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் உதவியுடனும் இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் ஒத்துழைப்புடனும் இந்த யாத்திரை ஒருங்கிணைக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்