கொங்கன் இரயில்வே கழகமானது, மகாராஷ்டிராவின் ரோஹாவில் இருந்து கர்நாடக மாநிலத்தின் தோக்கூர் வரையிலான 741 கிலோ மீட்டர் பாதை முழுவதையும் மின் மயமாக்கியுள்ளது.
741 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தப் பாதையை மின்மயமாக்கியதன் மூலம் ரூ.150 கோடி எரிபொருள் சேமிப்பாகும்.
இது மாசு எதுவும் இல்லாத, தடையற்றச் செயல்பாடுகளை உறுதி செய்வதோடு எரிபொருளுக்காக டீசலைச் சார்ந்திருப்பதையும் குறைக்கும்.
2023 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்திற்குள், இந்திய இரயில்வே தனது அகல இரயில் பாதைக் கட்டமைப்பினை 100 சதவீதம் மின்மயமாக்கும் திட்டங்களைக் கொண்டு உள்ளது.
கொங்கன் இரயில்வே மூலம் மும்பை நகரம் மங்களூருநகரத்துடன் இணைக்கப் பட்டு உள்ளது.
கொங்கன் இரயில் பாதை ஆனது கோவா, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா வழியே நாட்டின் மேற்குக் கடற்கரையினூடே செல்கிறது.