TNPSC Thervupettagam

கொசுக்கள் மற்றும் உண்ணிகளால் பரவும் வைரஸ் நோய்களுக்கான வழி காட்டுதல்கள்

July 20 , 2025 7 days 39 0
  • டெங்கு, சிக்குன்குனியா, ஜிகா மற்றும் மஞ்சள் காய்ச்சல் போன்ற ஆர்போவைரல் /கொசுக்கள் மற்றும் உண்ணிகளால் பரவும் வைரஸ் நோய்களுக்கு சிகிச்சையளிக்கச் செய்வதற்கான முதல் உலகளாவிய வழிகாட்டுதல்களை உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ளது.
  • பருவநிலை மாற்றம், உலகளாவியப் பெரும் பயணம் மற்றும் பலவீனமான சுகாதார அமைப்புகள் காரணமாக கொசுக்களால் பரவும் இந்த நோய்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன.
  • 5.6 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பெரும்பாலும் காய்ச்சல், சொறி மற்றும் மூட்டு வலியுடன் தொடங்குகின்ற இந்த ஆர்போவைரல் வகை வைரஸ் நோய்களைப் பெறும் அபாயத்தில் உள்ளனர்.
  • இந்தப் புதிய வழிகாட்டுதல்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நோயாளிகளின் லேசான மற்றும் கடுமையான ஆர்போவைரல் வைரஸ் நோய்களுக்கு என்று மிகவும் பாதுகாப்பாகவும், சரியான முறையில் சிகிச்சையளிக்கவும் உதவுகின்றன.
  • இந்தத் தெளிவான வழிமுறைகள் குறிப்பாகச் சுகாதார வளங்கள் குறைவாக உள்ள இடங்களில் உயிரிழப்பு மற்றும் சிக்கல்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்