கொச்சிக்கான பல்லுயிர்ப் பெருக்கக் குறியீட்டு வரைபடம்
September 22 , 2020 1794 days 793 0
கேரளாவில் உள்ள ஒரு நகரத்திற்கான முதலாவது வரைபடம் மற்றும் நாட்டின் இரண்டாவது வரைபடம் இதுவாகும்.
இந்தக் குறியீடானது நிலையான வளர்ச்சிக்கான ஐசிஎல்இஐ – உள்ளாட்சிகளின் மூலம் பாரம்பரிய, சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டு மையத்தின் உதவியுடன் செயல்படுத்தப்படும் “இண்டர்ஏக்ட் – பயோ” என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இது நகரத்தின் பல்லுயிர்ப் பெருக்க உயிரியல் குறியீட்டை மேம்படுத்துவதையும் நகர்ப்புறப் பகுதிகளில் பசுமையை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக “விளக்கப்பட்ட இயற்கைச் சொத்து” (Illustrative Natural Asset Map) என்ற ஒரு வரைபடமும் வெளியிடப்பட்டுள்ளது.