கொச்சி – முசிறி ஈராண்டிற்கொருமுறை நடைபெறும் திருவிழா
March 24 , 2019 2247 days 709 0
கொச்சி – முசிறி ஈராண்டிற்கொருமுறை நடைபெறும் திருவிழா என்பது சமகாலக் கலையின் சர்வதேசக் கண்காட்சியாகும். இது கேரளாவின் கொச்சியில் நடைபெற்றது.
இது இந்தியாவின் மிகப் பெரிய கலைக் கண்காட்சியாகும். இது ஆசியாவின் மிகப் பெரிய சமகாலக் கலைத் திருவிழாவாகும்.
கொச்சி – முசிறி ஈராண்டிற்கொருமுறை நடைபெறும் திருவிழா என்பது கேரள அரசின் ஆதரவுடன் கொச்சி திருவிழா அறக்கட்டளையின் முன்னெடுப்பாகும்.
மூடிய அரங்குகள் மற்றும் கலைக் காட்சிக் கூடங்களில் இந்தக் கலைகள் காட்சிப்படுத்தப்படுவதுடன் திறந்த வெளிகளிலும் இந்தக் கலைகள் காட்சிப்படுத்தப்படுவதால் இந்த கலைக் கண்காட்சி ஒரு தனித்துவம் வாய்ந்த கண்காட்சியாகும்.