TNPSC Thervupettagam

கொடிய தன்னாட்சி ஆயுத அமைப்புகள் (LAWS)

September 14 , 2026 15 hrs 0 min 14 0
  • ஐ.நா.வின் குறிப்பிட்ட மரபுவழி ஆயுதங்கள் மீதான மாநாட்டின் (CCW) கீழ் கொடிய தன்னாட்சி ஆயுத அமைப்புகளை (LAWS) வரையறுக்கும் வரைவு குறித்து ஜெனிவாவில் 128 நாடுகள் ஒருமித்த கருத்தை எட்டின.
  • கொடிய தன்னாட்சி ஆயுத அமைப்புகள் (LAWS) என்பவை, ஒவ்வொரு தாக்குதலுக்கும் மனிதத் தலையீடு இல்லாமல், முன்பே நிரல்படுத்தப்பட்ட அளவுருக்களைப் பயன்படுத்தி இலக்குகளைக் கண்டறிந்து, தேர்ந்தெடுத்துத் தாக்கும் தன்னாட்சி இராணுவ அமைப்புகளாகும்.
  • இந்த ஒருமித்த வரைவு கட்டுப்படுத்தாதத் தன்மையுடையது. மேலும் இது தன்னாட்சி ஆயுதங்கள் மீதான எதிர்கால சர்வதேச விதிமுறைகள் அல்லது ஒப்பந்தங்களுக்கு ஆதரவளிக்கலாம்.
  • அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் கட்டுப்படுத்தும் வகையிலான சட்டபூர்வமான ஒப்பந்தங்களை எதிர்க்கின்றன. மேலும் அவை கட்டுப்படுத்தாத அணுகுமுறைகள் அல்லது தற்போதுள்ள ஆயுதப் மோதல் சட்டங்களையே ஆதரிக்கின்றன.
  • தன்னாட்சி இலக்கு முறையைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டபூர்வமான ஒப்பந்தத்தை ஆதரிக்கும் நாடுகளில் பிரேசில், அயர்லாந்து மற்றும் நார்வே ஆகியவையும் அடங்கும்.
  • குறிப்பிட்ட மரபுவழி ஆயுதங்கள் மீதான மாநாடானது (CCW), 1980 ஆம் ஆண்டில் ஜெனிவாவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு 1983 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது என்ற நிலையில் இந்தியா இதில் ஒரு உறுப்பு நாடாகும் மற்றும் LAWS தொடர்பான அரசு வல்லுநர்கள் குழுவின் (GGE) விவாதங்களிலும் பங்கேற்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்